வாடகை ஒப்பந்த பத்திரம்


 
                                             வாடகை   ஒப்பந்த   பத்திரம்

1. 1 .2019 தேதியில் ஸ்ஸ்ஸ்ஸ்  மாவட்டம் மற்றும் வட்டம்-636807 வெள்ளேகவுண்டன்பாளையம் (பகுதி) இலக்கியம்பட்டி எஃப் ,நியூ காலனி என்ற முகவரியில் வசிக்கும் xxx 

தxxxx  மாவட்டம் தருமபுரி xxxx  காம்ப்லெஸ்  என்ற முகவரியில் வசிக்கும்xxx 

ஆகிய நாம் சேர்ந்து ஏகோபித்து எழுதிக் கொண்ட வாடகை ஒப்பந்த பத்திரம் என்னவென்றால்

                                                                             1.

                                                                             2.


                                               


                       -2-


நம்மில் 2 லக்கமிட்டவருக்கு பாத்தியப்பட்ட கீழ்கண்ட கட்டிடத்தை நம்மில் 1 நபர் "தி xxxx  "என்ற பெயரில் தொழில் நடத்தி வர வாடகைக்கு விட  ஒப்புக் கொண்டு கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு  நாம் கட்டுப்பட்டு பிரஸ்தாப சொத்தை இன்றே 2நபரிடம் 1 நபர் தன் சுவாதீனமும் செய்து கொண்டுள்ளார் 

1.அடியீல்கண்ட கட்டிடத்திற்கு மாதம் 1க்கு வாடகை ரூ.4500/- (ரூபாய்  நான்காயிரத்து ஐநூறு மட்டும்) ஆகும் 

2.இதற்காக 1 நபரிடம் 2 நபர் முன் அட்வான்ஸாக ரொக்கமாக பெற்று கொண்டது ரூ.50000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்)ஆகும் .

3.மேற்படி அட்வான்ஸ் தொகைக்கு வட்டி ஏதும் கிடையாது .வாடகை காலம் முடிவடைந்த பின்பு கட்டிடத்தை காலி செய்யும்போது அட்வான்ஸ் தொகையை 2 நபர் 1 நபரிடம் செலுத்திட வேண்டும்.

4.வாடகை நாளானது தேதியில்லிருந்து (1)ஒரு வருட காலம் வரையில் அமுலில் இருந்து வரவேண்டும்.

5.வாடகை கடையின் சொத்து வரியை 2 நபரும் ,மின்சார கட்டணம்,தொழில் வரியை நம்மில் 1 லக்கமிட்ட நபரும் செலுத்தி வர வேண்டும் .

6.வாடகை கடையை உள்வாடகைக்கு  விட  1 நபருக்கு உரிமை இல்லை 

7.வாடகை கடையின் பெரிய ரிப்பேர் செலவுகளை நம்மில் 2 நபரும் அவசரமானது ,சிரியதுமான ரிப்பேர் செலவுகளை நம்மில் 2 நபரின் முன் அனுமதியுடன் 1 நபர் செய்து கொள்ள வேண்டும் .

8.வாடகை கடையை வாடகை காலம் முடிந்தவுடன் 1 நபர் 2 நபரிடம் தான் சுவாதீனம் பெற்ற தற்போதுள்ள நல்ல நிலையிலே விட்டுவிட்டு ,நம்மில் 2 நபரிடம் 1 நபர் தான் செலுத்திய அட்வான்ஸ் தொகையை வட்டியின்றி திரும்ப பெற்று கொள்ள வேண்டும்




                                                                                                                1.

                                                                                                                2.





                                                                           
-3-



9.வாடகை தொகையை மாதம் பிரதி 6ம் தேதிக்குள் 2 நபரிடம் 1 ம் நபர் செலுத்த வேண்டும் 

10.தொடர்ந்து 6 மாதம் 1 நபர் வாடகை செலுத்த தவறினாலோ வாய்தா காலத்திற்குப் பின்னும் வாடகை கடையை 1 நபர் காலி செய்யத் தவறினாலோ அவரின் அனுமதியின்றி அவரை அப்புறப்படுத்தவும் காலி செய்யவும் சட்டரீதியான சிவில்,கிரிமினல்  வழக்கு தொடர்ந்து காலி செய்யஉம அதற்கான நஷ்டஈடு  பெறவும் 2 லக்கமிட்டவருக்கு உரிமையுண்டு.

11.அடியில்கண்ட கடை 1 நபருக்கு வாடகைக்கு தேவையில்லை என்றாலும் ,2 நபருக்கு கடை தேவை என்றாலும் சம்பத்தை பட்டவர்கள் மூன்று மாதத்திற்கு முன்பாவகே தகவல் தெரிவித்துவிட வேண்டும்.

இந்த வாடகை பாத்திரத்தின் நிபந்தனைகள் நமக்கு பொருந்தும்.அதற்கு நாம் கட்டுப்பட்டவர்கள் என நம் முழுமன சம்மததில் எழுதிக் கொண்ட வாடகை ஒப்பந்த பத்திரம் சரி 


                                        சொத்து விவரம் 

xxx ரி மாவட்டம் ,xxxx  ,xxxx ரு ,ஆர்.கே.காம்ப்லெஸ் கதவு xxxx  .என்ற எண்ணுள்ள கடைக் கட்டிடம்-1ம் இதிலுள்ள மின் இணைப்பு உளப்பட இதற்க்கு உள்படவும் இதற்கு உட்பட்டது .மேற்படி கடைக்கு போகவர மாமூல் வழிநடை சகல பாதியமும் இதற்கு உட்பட்டது 

1.

2.

சாட்சிகள் 

1.


2.






Comments

  1. மிக்க நன்றி நண்பரே.....வாழ்க வளமுடன்

    ReplyDelete

Post a Comment