பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கான செயற்பாட்டு வரைவு
நீரின்றி அமையாது உலகு என்று போதிக்கிறது தமிழ்மறை
1. அனைவருக்கும் தூய குடிநீர் இலவசமாக வழங்குதல்.
2. நீர் நிலைகளான ஆறு,ஏரி,கண்மாய்,குளம்,குட்டை மற்றும் வானியறு அணை அனைத்தும் தூர்வாரப்படும்.
3. நீர்நிலைகளை சுற்றி வேம்பு,புங்கை,நாவல்,ஆலமரம்,பூ வரச மரம், அரசமரம்,தேக்குமரம்,பனைமரம் நட்டு வளர்க்கப்பட்டு உயிர் சூழல் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஏற்றார்போல் நீர்நிலைகள் மாற்றப்பட்டு பாதுகாக்கப்படும்.
4.சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக அழிக்கப்படும் இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும் மற்றும் சிறந்த நீர் மேலாண்மை திட்டம் உருவாக்கப்படும்.
5. நாட்டின் வளர்ச்சி என்பது ஏர் முனையில் இருந்து தொடங்க வேண்டுமே தவிர விவசாயிகளின் சாவிலிருந்து அல்ல.
6. இயற்கை வேளாண்மை முறை ஊக்குவிக்கப்படும். (இரசாயன உரங்கள் இல்லாமல்)
7. வேளாண் குடிகளின் மண்வளத்தை தரப்பரிசோதனை செய்து மண்ணின் வளத்திற்கு ஏற்ப பயிர்களைப் பயிர் செய்து விளைச்சலை அதிகப்படுத்த வழிநடத்தப்படும்.
8. வானியாறுஅணை இடதுபுற கால்வாய் நீட்டிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
9. நீர்வழிப்பாதைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
10. விவசாய நிலத்தை அழிக்கும் எந்த திட்டம் கொண்டுவந்தாலும் எதிர்க்கப்படும் (8 வழி சாலை உட்பட).
11.உணவு பயிர் பயிரிடுதலின் முக்கியத்துவத்தை விவசாயிகளிடம் கொண்டு சென்று உணவே மருந்தாக மாற்றுவோம்.
12. தக்காளி,பூ,வெங்காயம்,காய்,கனி கள் போன்ற எளிதில் அழுகிவிட கூடிய பொருட்களால் வேளாண் குடிமக்கள் பெரிதும்
இழப்பு ஏற்படுகிறது இதைத் தவிர்க்கும் பொருட்டு தேவைக்கேற்ற குளிரூட்டி நிலையங்கள் அமைத்துக் கொடுக்கப்படும் இதனால் வேளாண் குடிமக்கள் இழப்பு அடையாத நிலையை உருவாக்குவேன்.
13. பண்ணைத் தொழில் மற்றும் கால்நடை வளர்த்தல்லின் அவசியத்தை முன்னெடுப்பேன்.
14. சூரிய சக்தி மின் உற்பத்தி செய்தல் ஊக்கப்படுத்தப்படும்.
15.சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
16. பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனை தரம் உயர்த்த முயற்சி எடுக்கப்படும்.
17. பாப்பிரெட்டிப்பட்டி ,கடத்தூர், பொம்மிடி பேருந்து நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.
18. சிறு குறு தொழில் முனைவோர்கள் கண்டறிந்து ஊக்கப்படுத்தப்படுவார்கள்,மானி யத்துடன் கூடிய வங்கி கடன் பெற உதவி செய்யப்படும்.
19.ஊராட்சிகள் தோறும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு தகுந்த பயிற்சி அளித்து சிறந்து தொழில் முனைவோர்களாக உருவாக்கி அவர்களின் பொருட்கள் சந்தைப்படுத்தி கொடுக்கப்படும்.
20.அரசின் இலவச வீடு திட்டங்கள் மற்றும் வீட்டுமனை திட்டங்கள் அனைத்தும் அரசியல் பாரபட்சமின்றி உரிய ஏழைகளுக்கு சமமாக பெற்றுத்தரப்படும்.
21.முதியோர் உதவித்தொகை முதியோர்களின் வீட்டிற்கே சென்று கொடுக்க வழிவகை செய்யப்படும்.
22. படிப்பு மற்றும் திறமைக்கேற்ற வேலை வாய்ப்பு பெற ஆலோசனைகள் மற்றும் சிறந்த தொழில் முனைவோர்கள் உருவாக்கப்படுவார்கள்.
23.விவசாயிகளுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சென்றடைய வழிவகை செய்யப்படும்.
24.நிலமற்ற கூலி தொழிலாளர்களுக்கு தகுந்த வருமானத்துடன் கூடிய வேலை கிடைக்க வழிவகை செய்யப்படும்.
25. தொகுதி முழுவதும் தகுதியான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கணினி மற்றும் தட்டச்சு பயிலகம் அமைக்கப்பட்டு இலவசமாக பயிற்சிகள் வழங்கப்படும் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும் (TNPSC,TET,etc).
26.விளையாட்டில் ஆர்வம் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்கள் கண்டெடுக்கப்பட்டு சரியான வழிகாட்டுதலுடன் வழிநடத்தப்படுவார்கள்.
27.சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்ட வத்தல்மலைக்கு சாலை அமைத்து சிற்றுந்து போக்குவரத்து செய்து கொடுத்து மலைவாழ் கிராம மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன்.
28. சேலம் to அரூர் நெடுஞ்சாலையில் உள்ள சேதம் அடைந்த சாலைகள் சரி செய்யப்பட்டு புதிய சாலைகள் அமைத்து தரப்படும்.
29. கிராமம் தோறும் விளையாட்டு திடல் அமைத்து கொடுத்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.
30. முக்கிய பேருந்து நிலையங்களிலும் இலவச அருகலை(WIFI ) அமைத்து தரப்படும்.
31. பேருந்து நிலையங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் சிசிடிவி கேமரா(CCTV CAMERA ) பொருத்தப்படும்.
32. தொகுதிக்கான வளர்ச்சி நிதிகள் முழுவதும் முறையாக தொகுதியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு செலவுகள் அனைத்தும் வெளிப்படையாக மக்களுக்கு காண்பிக்கப்படும்.
33.தொகுதியில் உள்ள மொத்த கிராமங்களை ஐந்து பகுதிகளாக பிரித்து,அப்பகுதிகளின் தேவைகளை கண்டறிந்து,திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்குதலை சரியான முறையில் செயல்படுத்த அந்தந்த பகுதியில் ஒருவர் வீதம் மொத்தம் ஐந்து படித்த இளைஞர்களை தேர்வு செய்து பணியில் அமர்த்தப்படுவார்கள் இவர்களுக்கான ஊதியமானது எனது சட்டமன்ற உறுப்பினர் ஊதியத் தொகை முழுவதையும் பகிர்ந்து கொடுப்பேன்.
34. தொகுதிக்கு என தனியாக கைபேசி செயலி (மொபைல் ஆப்) உருவாக்கப்பட்டு வேளாண்மை,வேலைவாய்ப்பு,கல்வி மற்றும் இதரவளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தெரிந்துகொள்ள உருவாக்கப்படும்.
Nice Post.
ReplyDeleteTNPSC Portal Daily Current Affairs
tnpsc question paper
samacheer kalvi books
tnpsc group 1 exams
Informative post, Thanks for sharing the useful content to make reader to read post more interesting.
ReplyDeleteXerox machine services in Chennai
xerox machine sales in chennai
xerox machine rental in chennai
Xerox machine dealers in Chennai